Monday, March 21, 2011

சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சிக்கு மோதிரச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது. தற்போது கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி இந்திய ஜனநாயக கட்சிக்கு மோதிரச் சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்த தகவல் அக்கட்சியின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய ஜனநாயக கட்சி மோதிரச் சின்னத்தில் போட்டியிடும்
123 தொகுதிகளில் போட்டி: பாரிவேந்தர்


இந்திய ஜனநாயக கட்சி 123 தொகுதிகளில் போட்டியிடுகிறது என, அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியுடன் யாதவ மகாசபை கட்சி தலைவர் தேவநாதன், சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், தமிழ்நாடு வாணிய செட்டியார் பேரவை கட்சி தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள்.

இந்த கூட்டணிக்கு இந்திய ஜனநாயக முன்னணி என்று பெயரிடப்பட்டுள்ளது. அசோக்நகரில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் இக்கூட்டணியினர் ஒன்றாக கூடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாரிவேந்தர் கூறுகையில், எங்கள் அணியில் 234 தொகுதியிலும் போட்டியிடுகிறோம். இதில் இந்திய ஜனநாயக கட்சி 123 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கும் 23 தொகுதிகள் எங்கள் அணியில் பிரித்து கொடுக்கப்படும்.

இதேபோல் யாதவ மகா சபை கட்சி 88 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்து கிறது. இதில் ஜான்பாண்டி யனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தொகுதிகளில் பகிர்ந்து வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த உள் ளோம். ஒரே மேடையில் நாங்கள் பேசுவோம் என்றார்.

பின்னர் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் 123 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரிவேந்தர் அறிவித்தார். பின்னர் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

Wednesday, March 2, 2011

பெரம்பலூரில் விவசாயிகள் மாநாடு: ஐ.ஜே.கே

பெரம்பலூரில் விவசாயிகள் மாநாடு

ஐஜேகே: 25 வேட்பாளர்கள் பட்டியல்


இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே) சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநில மாநாடு பெரம்பலூரை அடுத்த வல்லாபுரம் கைகாட்டி அருகே நேற்று நடந்தது.

இதில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உருவபடத்தை திறந்து வைத்து பேசினார்.




மாநாட்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்கட்டமாக பெரம்பலூர், திருச்சி, அரியலூர், குன்னம், லால்குடி, கும்பகோணம், ஸ்ரீரங்கம் உள்பட 25 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பச்சமுத்து வெளியிட்டார். அவர்கள் விவரம் வருமாறு:-

விருத்தாசலம்- ஆர்.கிருஷ்ணமூர்த்தி, குன்னம்- பி.ஜெயசீலன், அரியலூர்-சி.பாஸ்கர், லால்குடி- டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து, நெல்லை- எஸ்.மதன், திருச்சி கிழக்கு- எஸ்.டி.தங்கவேல், புதுக்கோட்டை- கே.பி.என்.சீனிவாசன், திருவையாறு- ஜி.முத்துக்குமார், ஸ்ரீரங்கம்- தமிழரசி, காரைக்குடி- எஸ். ஆசைத்தம்பி, திருவெறும்பூர்- எட்வின் ஜெரால்டு, துறையூர் (தனி)- க.சிங்காரம், முசிறி- பன்னீர்செல்வம், திருச்சி மேற்கு- கே.டி.அம்புரோஸ், மண்ணச்சநல்லூர்- டி.ஆர்.சீனிவாசன், குளித்தலை- சித்ராசுப்ரமணியன், சிவகங்கை- சி.குழந்தைசாமி,

உளுந்தூர்பேட்டை- வக்கீல் சுரேஷ், திருவாடானை- வி.ஆர்.போஸ், பெரம்பலூர் (தனி)- எம்கே.ரெங்காஸ், மைலாப்பூர்- எஸ்.எஸ்.வெங்கடேசன், தியாகராயநகர் - சு.பா.முத்துபாரதி, பாளையங்கோட்டை- லட்சுமணன், கும்பகோணம் - தட்சிணாமூர்த்தி, ஜெயங்கொண்டம் - ஜி.ராமச்சந்திரன்.

மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.