Friday, May 6, 2011

லஞ்சம், ஊழல் என்றால் என்ன?

முதலில் ஊழல் என்றால் என்ன? எது ஊழல்? என்பவை குறித்து தெளிவான புரிதல்கள் இருக்க வேண்டும்.
மக்களின் வரி பணத்தை திட்டங்கள் என்ற பெயரில் சுருட்டுவது .
திட்டங்களை நிறைவேற்ற சரியான அணுகுமுறை இல்லாமல் உதறிதனமாக பொறுப்பற்று சுயலாபம் கருதி செய்வது
தற்போது நடப்பில் இருக்கும் சட்ட விதிமுறைகளை மீறிச் செயல்படுவது
அல்லது சாராம்சத்தில் மக்களின் வாழ்வாதாரத்தில் தீயகுறுக்கீடு செய்யும் அனைத்தும் ஊழல்
எடுத்துக்காட்டாக தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது மொத்த முதலீட்டைவிட அதிகமான அளவில் சலுகைகளும் வரி விலக்குகளும் அரசால் அளிக்கப்படுகின்றன.
நியாயப்படி இந்த ஒட்டுமொத்த அனுமதியே ஊழலாக கருதப்பட வேண்டும். ஆனால், அரசு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் ஷரத்துகளில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்திருக்கிறதா என கண்காணித்து நடந்திருக்கும் பட்சத்தில் அதை மட்டும் ஊழல் என்பதா? சந்தை விலையில் 7000 மதிப்புள்ள இரும்புத்தாதுவை வெறும் 27 ரூபாய்க்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பது ஊழல்.
அரசு நியமிக்கும் ஒரு குழுவால் ஊழலை என்ன செய்துவிட முடியும்

லஞ்சம் என்றால் என்ன - காரியம் அரசு அலுவலகங்களில் நடக்க , அரசு வழக்கும் சான்றிதழ் மற்றும் அரசு கொடுக்கும் நலத்திட்டங்களை பெற அதிகாரிகள் வாங்கும் சன்மானம் (பிச்சை எடுகிற பொலப்பு ) .
எடுத்துக்காட்டாக:ஒரு கிராமத்தில் வாழும் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள். எதிர்பாராதவிதமாக பிறக்கும்போதே இரண்டு பேரும் ஊனமுற்றவர்களா பிறந்துவிட்டார்கள்.. மூளை வளர்ச்சி குன்றிய முதல் மகனையும், வாய்பேச இயலாத இளைய மகனையும் நல்லமுறையில் வளர்ப்பதற்கு அரசின் ஊனமுற்றோரின் உதவித்தொகை அவர்களுக்குதேவைப்பட்டது.

அதற்காக தன்னுடைய மகன்களுக்கு ஊனமுற்றோர் சான்றிதல் பெற அதற்கான அலுவலகத்திற்கு அவங்க தாயார் போனாங்க. அந்த அலுவலரோ, சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றது மட்டுமல்லாமல், அரசு வழங்கும் உதவித்தொகை மாத மாதம் சிறிது லஞ்சமாக பெற்றபிறகே வழங்கிஇருக்கிறார். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் அந்த அலுவலரும் ஒரு ஊனமுற்றவரே.

லஞ்சம் ஒழிக்கப்படவேண்டும் என்றல் ஊழல் செய்பவர்களை துக்கில் போட சட்டம் கொண்டுவரவேண்டும்